நாடாளுமன்றம் முற்றிலும் பாஜக அரங்கமாக நடத்த விரும்பும் பாஜக.. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகப் படுகொலையையும் கடந்தது: மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஜனநாயகப் படுகொலை என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டெல்லி காவல்துறை மற்றும் என்.டி.ஆர்.எப் உள்ளிட்ட அனைத்து படைகளும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கீழ் வரும் நிலையில் பிரதமரும், அமித்ஷாவும் விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது.

ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பியதற்காக இடைநீக்கம் செய்யப்படுவது ஜனநாயக படுகொலையையும் கடந்தது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். முற்றிலும் பாஜக அரங்கமாக நடத்த பாஜக விரும்புகிறது. குஜராத் சட்டசபை போல நாடாளுமன்றத்தை நடத்துகிறார்கள் என்றும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பவர்கள் இடைநீக்கம் செய்யப்படும் நிலை நீடித்தால் நாளை சாமானியர்களும் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்படும் என்பதும் பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் அதற்குரிய அம்சங்கள் கடைபிடிக்கப்படாதது வருங்கால ஜனநாயக நடைமுறையையே கேள்விகுள்ளாக்குவதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

The post நாடாளுமன்றம் முற்றிலும் பாஜக அரங்கமாக நடத்த விரும்பும் பாஜக.. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகப் படுகொலையையும் கடந்தது: மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: