பந்தலூர் அருகே கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா பகுதி நேர நூலகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலா நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஆல் த சில்ரன், ஏகம் பவுன்டேசன், தேவாலா பகுதி நேர நூலகம் ஆகியன சார்பில் ஊட்டசத்து மற்றும் மன நல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி நேர நூலக பொறுப்பு நூலகர் நித்தியகல்யாணி தலைமை தலைமை தங்கினார். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், சுகாதார நிலைய மருந்தாளுணர் விக்னேஸ்வரி, செவிலியர் நல்கிஸ் பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார நிலைய மருத்துவர் நவீன் குமார் பேசும்போது, கர்ப்ப காலத்துக்கு முன்னதாகவே உடலில் கர்ப்பத்தை தாங்கும் சத்து உள்ளதா என்பதை ஆய்வு செய்து மேற்கொள்வது அவசியம், 21 வயதுக்கு மேல் கர்ப்பம் ஆவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எச்பி அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அதற்கு தேவையான மாத்திரைகள் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது மாதம் 5வது மாதம், 7 மாதம், 9 மாதம் களில் ஸ்கேன் எடுத்து குழந்தையின் நிலையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை எனும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கழி குழந்தையை குறித்து பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருநது மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல் குழந்தையை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
தாய்மார்களுக்கு ரத்த அளவு குறையும்போது பிரசவத்தின் போது ரத்த இலக்கு அதிகம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் கடைசி மாதங்களில் மருத்துவமனைக்கு எளிதில் வரக்கூடிய வகையில் தங்களது இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியமாகிறது.

வீட்டில் பிரசவம் பார்ப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தவிர்க்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் உரிய தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளுங்கள். அது போல தாய்ப்பால் ஆறு மாதம் கட்டாயமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெற முடியும் என்றார்.மருத்துவர் அஷ்லா பேசும்போது, குழந்தை உருவாவதை உடனடியாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தி கொண்டு குழந்தைக்கு முன்கூட்டியே உறுதி சிகிச்சை பெற வேண்டும்.

சிலர் ஆறு மாதம் வரை குழந்தை உண்டாகியது அறியாமல் இருப்பதால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமைகள் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை முறையாக மேற்கொண்டு வர வேண்டும். உறவுகளை திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். குழந்தைக்கு தயாராகும் முன்னர் கணவன் மனைவி இருவரும் உடல் பரிசோதனை மேற்கொள்ளவதும் அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, கர்ப்ப காலத்தில் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காய்கறி, சிறுதானிய உணவுகள், பழங்கள், இறைச்சி, மீன் போன்றவற்றை வேகவைத்து நன்றாக மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தினசரி கீரை உணவுகள், உலர் திராட்சை, பேரிச்சம் பழம் போன்றவை எடுத்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான மன நிலை இருக்க நல்ல கதைகள், ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள் படித்தல் மெல்லிய இசைகள் கேட்டல் மனதை மென்மை படுத்தும். கவலை துக்கம் போன்ற உணர்வுகளை தடுக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் நூலக பணியாளர் ஜெயசித்ரா, செவிலியர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பந்தலூர் அருகே கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: