பிராந்திய அமைதிக்கு பாக். உறுதி பூண்டுள்ளது: ராணுவ தளபதி அசீம் முனீர் சொல்கிறார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புதனன்று சந்தித்து பேசினார். அதிபருடன் அவர் உணவருந்தினார். பின்னர் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அப்போது ராணுவ தலைவர் முனீர், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கான பாகிஸ்தானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை வளர்ப்பதில் அதன் ஆக்கப்பூர்வமான பங்கையும் எடுத்துரைத்தார். தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் முன்னணியில் பாகிஸ்தான் உள்ளதாகவும், பாதுகாப்பான உலகத்தை நோக்கி மனித மற்றும் பொருளாதார ரீதியாக மகத்தான தியாகங்களை செய்துள்ளது என்றும் முனீர் குறிப்பிட்டார்.

 

The post பிராந்திய அமைதிக்கு பாக். உறுதி பூண்டுள்ளது: ராணுவ தளபதி அசீம் முனீர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: