ஒட்டன்சத்திரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.5 கோடிக்கு காய்கறி விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பிரசித்தி பெற்ற காய்கறி மார்க்கெட் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை, விவசாயிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இங்கு விற்பனையாகும் காய்கறிகளில் 70 சதவீதம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை காய்கறி மார்க்கெட் களைகட்டியது.
1000க்கும் மேற்பட்ட லாரிகளில், சுமார் 5 கோடி மதிப்பிலான காய்கறிகளை கேரள வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை மார்க்கெட் விடுமுறை நாளாகும். இதனால், இன்று காலை முதல் வியாபாரிகளும், விவசாயிகளும் மார்க்கெட்டில் குவிந்தனர். இன்றைய மார்க்கெட்டில் 14 கிலோ தக்காளிப் பெட்டி ரூ.200, சின்னவெங்காயம் கிலோ ரூ.30, பல்லாரி கிலோ ரூ.40, பூசணிக்காய் கிலோ ரூ.10, நார்த்தங்காய் கிலோ ரூ.95, எலுமிச்சை கிலோ ரூ.130, மிளகாய் கிலோ ரூ.26, பீட்ரூட் கிலோ ரூ.9, முருங்கை கிலோ ரூ.20, கத்திரி ரூ.20, அவரைக்காய் கிலோ ரூ.26, கோவைக்காய் கிலோ ரூ.10, பீன்ஸ் 10 கிலோ ரூ.450 என விற்பனையானது.
வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த காரணத்தால், கேரளா அரசு ஓணம் பண்டிகையை ரத்து செய்தபோது, ஓணம் பண்டிகை, மீலாது நபி தினத்தை தொடர்ந்து விற்பனை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடிக்கு காய்கறி விற்பனை appeared first on Dinakaran.