எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார், உத்தவ்வை சந்தித்தார் நிதிஷ்குமார்

மும்பை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியாக சரத்பவார், உத்தவ் தாக்கரேவை நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த ஆண்டு பாஜவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்கும் வகையில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். செவ்வாயன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் நிதிஷ் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று மும்பையில் தனியார் குடியிருப்பில் சந்தித்து பேசினார்கள்.

இது அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகின்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார், ‘‘அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் பாஜவுடன் போட்டி ஏற்படும். எதிர்கட்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நாடு சரியான திசையில் செல்லும். நாட்டின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். எந்தவித சர்ச்சையும் இருக்கக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து நேற்று மாலை நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்தார்கள்.அப்ேபாதும் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

The post எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார், உத்தவ்வை சந்தித்தார் நிதிஷ்குமார் appeared first on Dinakaran.

Related Stories: