தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில் களமிறங்க அதானி மெகா திட்டம் :ரூ.10,000 கோடிக்கு பென்னா சிமெண்ட்டை வசமாக்குகிறது!!

ஹைதராபாத் :சிமெண்ட் வர்த்தகத்தில் ஒட்டுமொத்த ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாக சுமார் ரூ.10,000 கோடி செலவில் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை தவசப்படுத்தி இருக்கிறார் கவுதம் அதானி. பல்வகை தொழில்களில் ஈடுபட்டு இருக்கும் அதானி குழுமம் கட்டுமான தொழில் முன்னணி நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிமெண்ட் தயாரிப்பில் தனி ஆதிக்கம் செலுத்தும் வகையில், அதன் எல்லைகளை விரிவாக்க அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு இருக்கும் பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்த இருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 1.40 கோடி டன் சிமெண்ட் தயாரிப்பு திறன் கொண்ட பென்னா சிமெண்ட்ஸை ஆந்திர தொழில் அதிபர் பிரதாப் ரெட்டியிடம் இருந்து ரூ.10,442 கோடிக்கு வாங்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு திறன் ஆண்டுக்கு 8.9 கோடி டன்னாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. பென்னா சிமெண்ட்ஸை வாங்குவதன் மூலம் விரைவில் தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில் மிகப்பெரிய கால் பதிக்கிறது அதானி. பென்னா சிமெண்ட்ஸ் அதிபர் பிரதாப் ரெட்டி ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் தந்தை நம்பிக்கைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில் களமிறங்க அதானி மெகா திட்டம் :ரூ.10,000 கோடிக்கு பென்னா சிமெண்ட்டை வசமாக்குகிறது!! appeared first on Dinakaran.

Related Stories: