அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பணமோசடி: இந்திய இளைஞருக்கு 33 மாதம் சிறை தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆன்லைன் பணமோசடி வழக்கில் கைதான இந்தியருக்கு, 33 மாத சிறைத்தண்டனையும், 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான ஆஷிஷ் பஜாஜ் (29), கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை, ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களின் மூலம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். இவருடன் சேர்ந்து அவரது நண்பர்களும் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களின் பணமோசடி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

மேற்கண்ட குற்றவாளிகளை பிடிக்க ‘ஸ்டிங் ஆபரேஷன்’ செய்து, ஆஷிஷ் பஜாஜ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்தியா, சீனா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள பல்வேறு வங்கிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இவ்வழக்கு நெவார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் பஜாஜிக்கு 33 மாத சிறை தண்டனையும், 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்றனர்.

The post அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பணமோசடி: இந்திய இளைஞருக்கு 33 மாதம் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: