தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகா, கைப்பேசி வழியாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு ரூ.70 ஆயிரம் பறிகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், ஏற்பட்ட விரக்தியில் கைக்குழந்தையைக் கொன்று, தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என்றும் முதற்கட்டமாக தெரியவந்தது.
The post ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் குழந்தையை கொன்று, பெண் தற்கொலை appeared first on Dinakaran.
