×

செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் உள்பட 30 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Chengalpattu , Bricklayer, Tipper Lorry. Government bus collided with an accident, 30 people were injured
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...