×

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே  போந்தவாக்கம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை 374 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது.

இதில் மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா, சர்வதேச விண்வெளி மண்டலம்,  பழைய நாணயங்கள், கைவினைப் பொருட்கள்,  ஏடிஎம் மெஷின் மற்றும் மனிதனின் உடற்கூறுகள் போன்றவற்றை செய்து கண்காட்சியில் வைத்தனர். இந்த கண்காட்சியை பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியை கதிரொளி, அறிவியல் ஆசிரியர்கள் ஜி.ரவி, ஜீவா, ஷோபன லட்சுமி, வசந்தகுமாரி, வேணுகோபால், நரசிம்மன், பெற்றோர்கள் பார்வையிட்டனர். 


Tags : Government School Students Science Fair , Government School Students Science Fair
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...