×

பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி.!

சதுரகிரி: 7ம் தேதி மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 7-ந் தேதி மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களை சதுரகிரிக்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chathuragiri temple , Devotees are allowed 5 days to visit Chathuragiri temple on the occasion of full moon and Pradosha worship.
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...