சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திடக்கோட்டையில் உள்ள காளியம்மன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்கக் கோரி அதே ஊரை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், உரிய விசாரணை நடத்தி 4 வாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
