திருவாரூர்: மன்னார்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சவளக்காரன் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். பள்ளியில் வகுப்பறை, கழிவறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். விளையாட்டு மைதானம் கட்டித் தரப்படும் என்று மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
