×

நாசா விண்வெளி மையம் சார்பில் உலக அளவிலான ஓவிய போட்டி: நாசா காலண்டரில் பழனி பள்ளி மாணவி வரைந்த ஓவியம் தேர்வு

திண்டுக்கல்: நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக அளவில் நடத்திய ஓவிய போட்டியில் பழனியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி 2-ம் இடம் பிடித்துள்ளார். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் 2023-ம் ஆண்டு காலண்டருக்கான உலகளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 25,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றன. இதில் பழனியை சேர்ந்த ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி தித்திகா வரைந்த ஓவியம் தேர்வாகியுள்ளது.

தேர்வான 9 ஓவியங்களில் மாணவி தித்திகாவின் ஓவியமும் இடம் பெற்றுள்ளது. தேர்வாகியுள்ள ஒன்பது ஓவியங்களும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய வருட காலங்களில் அச்சிடப்பட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட இருக்கிறது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவி தித்திகாவை பள்ளியின் தாளாளர் சாமிநாதன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : NASA ,Space Center Global Painting Competition , NASA, Space, Calendar, Palani, School, Student, Examination
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...