×

மன்னார்குடி அருகே பைக்குகள் மோதல்: மாணவன், வியாபாரி பலி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த செருமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த ராஜா மகன் ஜெயச்சந்திரன் (20). மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை ஜெயச்சந்திரன், வீட்டிலிருந்து மன்னார்குடிக்கு பைக்கில் சென்றார்.

செருமங்கலம் விஏஓ அலுவலகம் அருகில் மன்னார்குடி அண்ணாமலை நாதர் கோயில் தெருவை சேர்ந்த சோப்பு வியாபாரி ஜோதிபாசு (50) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ஜெயச்சந்திரன் பைக்கும் நேருக்குநேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயச்சந்திரன் அந்த இடத்திலேயே பலியானார். ஜோதிபாசு படுகாயமடைந்தார். திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mannargudi , Bike collision near Mannargudi: Student, trader killed
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...