×

கொளப்பள்ளி பேக்டரிமட்டத்தில் வீட்டின் அருகே நிலச்சரிவு தடுப்புசுவர் கட்டித்தர கோரிக்கை

பந்தலூர் :  பந்தலூர் அருகே கொளப்பள்ளி பேக்டரிமட்டம் பகுதியில் கனமழைக்கு வீட்டின் முன்பக்கம் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்பு தடுப்புசுவர் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி அண்ணாநகர் பேக்டரி மட்டம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுக்கு முன் பெய்த கனமழைக்கு கூலித்தொழிலாளி செல்லையாஎன்பவரின் வீட்டின் முன்பக்கம் மண்சரிவு ஏற்பட்டு வீடு அந்தரத்தில் தொங்கி வருகின்றது.

இப்பகுதியில் மேலும் சில குடியிருப்புகளும் உள்ளது. மீண்டும் கனமழை பெய்தால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புசுவர் கட்டித்தரவேண்டும் என எம்எல்ஏ மற்றும் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம்,கலெக்டர் ஆகியோருக்கு புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தார்பாய் போட்டு மறைத்து பாதுகாத்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி தடுப்புசுவர் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kolappalli , Pandharpur: A landslide occurred in front of a house due to heavy rain in the Kolappalli factory level area near Pandharpur.
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...