×

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தயார் : பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

மீனம்பாக்கம்:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,’பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை பாஜவும் ஏற்று கொள்ளவில்லை அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தயார். இதை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் பல இடங்களில் கூறியுள்ளார். பாஜ ஆட்சி செய்யும் 3 மாநிலங்கள், 2018ல் பெட்ரோல் விலை இரண்டரை ரூபாய் குறைத்துள்ளது. ஒன்றிய அரசு சொன்னது போல் முயற்சி எடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்,’ எனத் தெரிவித்துள்ளார்….

The post ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தயார் : பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Meenambakkam ,Tamil Nadu ,Bajha ,Anamalai, Chennai ,Indigo Airlines ,Raja ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...