×

இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோ ஆனார்

சென்னை: ‘புதுவசந்தம்’, ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘வானத்தைப் போல’, ‘பிரியமான தோழி’ உள்பட பல படங்களை இயக்கியவர், விக்ரமன். அவரது மகன் விஜய் கனிஷ்கா, தற்போது ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்கிறார். இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார். சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகின்றனர். இது முழுநீள கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. விஜய் கனிஷ்காவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், பி.எல்.தேனப்பன், சுரேஷ் காமாட்சி, இயக்குனர்கள் எழில், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோபாலா, லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர்.கண்ணன், சரண், ரமேஷ்கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், நடிகை தேவயானி, நடிகர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அனைவரையும் விக்ரமன் வரவேற்றார்.

Tags : Vikraman ,Vijay Kanishka ,
× RELATED சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கும்...