×

கேன்ஸ் பட விழாவில் கண்ணப்பா டீசர்

கேன்ஸ்: இந்திய சினிமாவின் காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’- படத்தின் டீசர் கேன்ஸ் பட விழாவில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் படத்தின் நாயகன் விஷ்ணு மன்ச்சு, அவரது அப்பாவும் நடிகருமான மோகன் பாபு, விஷ்ணு மன்ச்சுவின் மனைவி விரானிகா மற்றும் ‘கண்ணப்பா’ படத்தின் நடன இயக்குனர் பிரபு தேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கெவின் காஸ்ட்னர் இயக்கிய ‘ஹாரிசன்: அன் அமெரிக்கன் சாகா’ படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியிலும் கண்ணப்பா டீம் கலந்துகொண்டது. அழுத்தமான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களால் பார்வையாளர்களை இப்படம் கவர்ந்தது. தொடர்ந்து நேற்று மாலை ஒலிம்பியா தியேட்டரில் கண்ணப்பா படத்தின் டீசர் ஒளிபரப்பாகி, கவுரவிக்கப்பட்டது.

The post கேன்ஸ் பட விழாவில் கண்ணப்பா டீசர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Cannes Film Festival ,CANNES ,Vishnu Manchu ,Mohan Babu ,Viranika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேன்ஸ் திரைப்பட விழா விருதுகளை குவித்த இந்திய திரையுலகம்