×

கலகல அதிரடி ‘உப்பு புளி காரம்’ சீரிஸ்… மே 30 முதல் ஓடிடியில்!

அடுத்த அதிரடி ஸ்பெஷல் ‘உப்பு புளி காரம்’ சீரிஸை வரும் மே 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸானது, காதல், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்.

‘உப்பு புளி காரம்’ ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

The post கலகல அதிரடி ‘உப்பு புளி காரம்’ சீரிஸ்… மே 30 முதல் ஓடிடியில்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Disney ,Hotstar ,OTT ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஓடிடியில் வருகிறது மெகாஹிட் ‘அரண்மனை 4’ திரைப்படம்!