×

படிக்காத பக்கங்கள்: விமர்சனம்

தனது காதலனை நல்லவன் என்று நம்பிய தர்ஷினி, அவருடன் மிக நெருக்கமாக இருக்கிறார். அதை செல்போனில் மிக ரகசியமாகப் படமெடுத்த காதலன், அந்த வீடியோவை ஒருவருக்கு அனுப்புகிறான். பிறகு தர்ஷினியின் வாட்ஸ்அப்புக்கு அந்த வீடியோ வருகிறது. அவரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் சைக்கோ வில்லன், வேறு சிலரிடம் அவரை நெருக்கமாக இருக்கச் சொல்லி வற்புறுத்துகிறான். நல்லவன் போல் நடித்து ஏமாற்றிய தனது காதலனிடம் நியாயம் கேட்கும் தர்ஷினியை சிலர் கொலை செய்து விடுகின்றனர். ஏற்காட்டில் நடக்கும் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு வந்த பிரபல சினிமா ஹீரோயின் ஜா என்ற யாஷிகா ஆனந்தை பேட்டி எடுக்கும் லோக்கல் டி.வி ரிப்போர்ட்டர் முத்துக்குமார், திடீரென்று அவரை மிரட்டி, தன்னுடன் மிக நெருக்கமாக இருக்கச் சொல்லி வீடியோ எடுக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில், முத்துக்குமார் கொல்லப்படுகிறார். வேெறாருவரும் கொலை செய்யப் படுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

இளம் பெண்களை காதல் என்ற பெயரில் நம்ப வைத்து, பிறகு அவர்களை தவறான கோணத்தில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல் பற்றி சொல்ல நினைத்த இயக்குனர் செல்வம் மாதப்பன், மாறுபட்ட திரைக்கதை அமைத்திருந்தால் மேலும் அழுத்தமாக இருந்திருக்கும். நடிகையாக வரும் யாஷிகா ஆனந்த் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். தர்ஷினியின் முடிவு உருக வைக்கிறது.
தவிர முத்துக்குமார், ஜார்ஜ் மரியான், ஆதவ் பாலாஜி ஆகிய மூவரும், இயக்குனர் சொன்ன மாதிரி நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வந்து, யாஷிகா ஆனந்துக்கு உதவுகிறார் பிரஜின்.டாலியின் ஒளிப்பதிவு, கதையை நகர்த்த உதவியிருக்கிறது. ஜாசி கிஃப்ட் இசை அமைத்துள்ளார். மதுவுக்கு எதிரான வைரமுத்துவின் பாடல் கவனம் ஈர்க்கிறது. படத்தின் உருவாக்கத்தில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.

The post படிக்காத பக்கங்கள்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Darshini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன்