நெல்லையப்பர் கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் பட்டின பிரவேசம்

நெல்லை: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிறைவையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்தியம்பாள் ரிஷப வாகனத்தில் பட்டின பிரவேசம் நடந்தது. நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு, ரதவீதி உலா நடைபெற்றது.  கடந்த 3ம் தேதி பேட்டை கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலில் காந்திமதியம்பாள் தவக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் வைபவம் நடந்தது.

பின்னர் சுவாமி நெல்லையப்பர், ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் காட்சி மண்டபத்தில் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் ஆயிரங்கால் மண்டபத்தில், கடந்த 4ம் தேதி அதிகாலை கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து 4ம் தேதி முதல் 6ம் தேதிவரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டின பிரவேச வீதி உலாவுடன் விழா நிறைவடைந்தது.

× RELATED நின்ற வாகனம் திடீரென ஓடியது