×

மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: தனது மகளை நினைத்துப் பெருமைப்படும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இசை அமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத்திறமை கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் கதீஜா இசை அமைப்பாளராகவும், ஏ.ஆர்.அமீன் பாடகராகவும் சிறந்து விளங்குகின்றனர். திரைத்துறையில் ஈடுபடாத ரஹீமா, துபாய் கேட்டரிங் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ரஹீமா பட்டம் வாங்கும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ’ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

The post மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : AR Rahman ,CHENNAI ,Saira Banu ,Khadija ,Raheema ,AR Amin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் முடிந்தது