×

தீவுகளில் உருவான மழை பிடிக்காத மனிதன்

சென்னை: ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘கோலி சோடா2’ போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், ‘திருமலை’ படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம், சக மனிதர்கள் மீதான தனது அக்கறை மற்றும் கருணையுள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து யாரோ ஒருவரின் எதிர்காலமாக மாறுகிறார் என்பதுதான் கதை. படம் அந்தமான் தீவுகள், டையூடாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ‘கோடியில் ஒருவன்’, ‘கொலை’, ‘ரத்தம்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். மே 29ல் டீசர் வெளியாகிறது.

The post தீவுகளில் உருவான மழை பிடிக்காத மனிதன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Vijay Milton ,Vijay Antani ,Sarathkumar ,Dali' Dhananjaya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜயகாந்த் நடிக்க இருந்த வேடத்தில் சத்யராஜ்