×

முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் தன்ஷிகா

பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்ஷிகா. கடைசியாக லாபம் படத்தில் நடித்திருந்தார்.  தற்போது யோகிடா, உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன் முறையாக மஞ்சரி என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, இவர்களுடன் பிரபலமான நடிகர் கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார். கே.வி.மணி ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். நவாஸ் அகமது இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Tags : Tanshika ,
× RELATED என் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருக்கிறார்: தன்ஷிகா பேச்சு