×

துப்பறிவாளர் இயக்கும் ‘தீர்ப்பு’

சில்வர் டச் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் துப்பறிவாளரும், பிரபல நாவலாசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்துக்கு ‘தீர்ப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மோகன் ராம் இசை அமைக்க, அகஸ்டின் பாடல்கள் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் ரெட்டி நடனப்பயிற்சி அளிக்கிறார். டி.கே.தினேஷ் அரங்கம் அமைக்கிறார். பல்வேறு விருதுகள் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் மேற்பார்வையில் படம் உருவாகிறது.

கே.மாருதி இணை எடிட்டிங் செய்கிறார், படம் குறித்து சிவகுமார் நாயர் கூறுகையில், ‘முழுநீள இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லராக உருவாக்குகிறோம். நான் எழுத்தாளராக இருப்பதுடன், துப்பறியும் சேவையிலும் ஈடுபட்டுள்ளேன். இப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவத்தை கொடுக்கும். சென்னை, அட்டப்பாடி, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.

Tags : Sivakumar Nair ,Silver Touch India Productions ,Mohan Ram ,Augustine ,Loganathan Srinivasan ,Ramesh Reddy ,D.K. Dinesh ,Bhimsingh Lenin ,K. Maruthi ,Sivakumar ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...