×

கிரிஜா ஓக் சொன்ன ரகசியம்

திடீரென்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருப்பவர், மராத்தி நடிகை கிரிஜா ஓக். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள 38 வயதான அவர், தனது 15வது வயதில் திரையுலகில் அறிமுகமானார். மராத்தியில் நிறைய படங்களில் நடித்துள்ளார். டி.வி தொடர்கள் மற்றும் வெப்தொடர்கள், விளம்பரங்கள் என்று பிசியாக இருக்கிறார். ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கிரிஜா ஓக், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நெருக்கமான காட்சிகளில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது, முத்தக்காட்சியில் நடிக்க மனதளவில் எப்படி தயாராவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரிஜா ஓக், ‘இந்த கேள்வியை என்னிடம் பலபேர் கேட்டுள்ளனர் என்றாலும், எனது பதில் என்பது ஒரேமாதிரிதான் இருக்கும்.

ஒரு துண்டு காகிதத்தை முத்தமிடுவது போல், எந்தவொரு உணர்ச்சியும் இருக்காது. சில நேரங்களில் நெருக்கமான காட்சியை படமாக்கும்போது, எனக்கு முன்பு ஒருவர் கூட இருக்க மாட்டார். கேமராவை பார்த்தோ அல்லது லைட்டிங் செய்ய பயன்படுத்தப்படும் கருப்பு துணியை பார்த்தோ, காதல் ரசம் பொங்கும் வசனங்களை பேசி நடிக்க வேண்டியிருக்கும். இப்படி நான் பலமுறை பேசியிருக்கிறேன்’ என்றார். இந்த ரகசியத்தை அறிந்த நெட்டிசன்கள், பதில் சொல்லாமல் அமைதியாகிவிட்டனர்.

Tags : Grija Oak ,D. ,Shah Rukh Khan ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...