×

பிரபு வீட்டிலிருந்து மதுவுக்கு நெய், தயிர் சப்ளை

பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு பின்  23 வருடங்கள் கழித்து பிரபு, மதுபாலா இணைந்து நடிக்கும் படம் காலேஜ் குமார். மேலும் ராகுல் விஜய், பிரியா லட்லமணி, நாசர், சாம்ஸ்  நடிக்கின்றனர். ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு.

படம் பற்றி பிரபு கூறும்போது,’ஹரி சந்தோஷ் திறமையான இயக்குனர். ஒவ்வொன்றையும் நடித்துக்காட்டுவார். இதனால் வித்தியாசமான நடிப்பை அவரால் வாங்க முடிகிறது. மதுபாலாவுடன் பாஞ்சாலங்குறிச்சியில் 23 வருடங்களுக்கு முன் நடித்தேன். அப்போது பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார்.

எந்த வயதிலும் கல்வி கற்க முடியும் என்ற கருவை மையமாக வைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியிருக்கிறது’ என்றார்.
மதுபாலா கூறும்போது,’பிரபுசாருடன் பாஞ்சாலங்குறிச்சியில் நடித்தபோது அவர் வீட்டிலிருந்து எனக்கு தயிர், நெய் ஸ்பெஷலாக வந்துவிடும். காலேஜ்குமார் படப்பிடிப்பிலும் அப்படி வந்தது. நல்ல கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறேன். அந்த பட்டியலில் இப்படமும் இடம்பெறும்’ என்றார்.

Tags : house ,Prabhu ,
× RELATED கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்