×

சின்னசாமி பொன்னையா இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக்

சென்னை: கேஆர்ஜி கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இதை சின்னசாமி பொன்னையா எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிகிறது. கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 5வது படம் இது. முன்னதாக பிரபுதேவா, வடிவேலு, யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்றும் ஒரு படத்தை அவர்கள் அறிவித்திருந்தனர்.

Tags : Gautam Ram Kartik ,Cinnesamy Ponnaiya movement ,Chennai ,KRG ,Kannan Ravi ,Deepak Ravi ,Sinnesamy Ponnaiah ,Yuvan Shankar Raja ,Kovilpatty ,Thoothukudi ,Tirunelveli ,Tenkasi ,Theni ,Pollachi ,Kashmir ,Prapudeva ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...