×

ஆறுதல் கூறிய ரசிகரால் நடிகை ஓவியா பதற்றம்

பிரபலமாக பேசப்பட்டாலும் நடிகை ஓவியா அதிக படங்களில் நடிக்காமல் விலகியிருக்கிறார். கடந்த ஆண்டு ‘90 எம்எல்’ படத்தில் நடித்திருந்தார். இது அடல்ட் காமெடி படமாக உருவானது. இப்படம் பரபரப்பாக பேசப்பட்டாலும் ஓவியாவுக்கு மைனஸாக அமைந்தது. இதனால் தாய்மார்களின் ஆதரவு அவருக்கு குறைந்துவிட்ட தாம். அவரை இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய அணுகுவதை குறைத்துக்கொண்டனர்.

அப்படியே ஒப்பந்தம் செய்தாலும் சிறிய கதாபாத்திரங்கள், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என குறைந்த அளவிலான வாய்ப்புகளே தரப்படு கின்றன. அதுபற்றி கவலைப்படாமல் இணைய தள டிவிட்டர் பக்கத்தில் ஓவியா பிஸியாகவே இருக்கிறார். தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவதுடன் அவ்வப்போது கருத்துக்களும் பகிர்கிறார். சமீபத்தில், ‘வாழ்க்கைக்கு அர்த்தமில்லை’ என்ற ஒரு பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார்.

அதைக்கண்ட ரசிகர்கள், ஓவியா மனவருத்தத்தில் இருப்பதாக எண்ணினர். அவருக்கு ஆறுதல் கூறுவதுபோல் பதில் மெசேஜ் பகிர்ந்தனர். ‘கவலை வேண்டாம், நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் கூடியவிரைவில் சரியாகிவிடும்’ என்று ஒரு ரசிகர் ஓவியாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஓவியா, ‘அடப் பாவிகளா.. நான் சொன்னது ஒரு தத்துவம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை’ என பதில் அளித்தார்.

Tags : Actress ,Comfortable Fan ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...