×

ஜித்தன் ரமேஷின் ‘ஹிட்டன் கேமரா’

சென்னை: ரிலாக்ரோ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘ஹிட்டன் கேமரா’. இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் ‘ஜித்தன்’ ரமேஷ், ஷாம்ஹுன், இயக்குனர் வின்சென்ட் செல்வா, அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார், மனோகர், எஸ்.பி.ராஜா, டாக்டர் பி.என்.முகமது பெரோஸ் கலந்துகொண்டனர். இது ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் 16வது படமாகும். ‘உயிரும், நேரமும் ஒருமுறை போனால் திரும்ப வராது’ என்ற கருத்தை மையப்படுத்தி, அதிரடி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தை அருண்ராஜ் பூத்தனல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். வி.எஸ்.சஜி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீனிகேத் விஷால் இசை அமைக்கிறார். அருண் சாக்கோ கதை எழுதுகிறார்.

Tags : Jithan Ramesh ,Chennai ,Shamhun ,Relaxo Productions ,Jithan' Ramesh ,Vincent Selva ,Appukutty ,Kaathal' Sukumar ,Manohar ,S.P. Raja ,Dr. ,P.N. Mohammed Feroz ,Arunraj Bhoothanal ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...