×

*தேஜா சஜ்ஜா நடிப்பில், “மிராய்” திரைப்படம்; உலகளவில் 100 கோடி வசூல்!

 

தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த “மிராய்” திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

“மிராய்” வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்குப் பிறகு, இந்த சாதனையை எட்டிய தேஜாவின் இரண்டாவது படம் இதுவாகும். சவாலான ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தேஜா சஜ்ஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வில்லனாக நடித்த மனோஜ் மாஞ்சு மற்றும் தாயாக நடித்த ஷ்ரேயா சரண் ஆகியோரும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். கதாநாயகியாக நடித்த ரித்திகா நாயக், தனது வலுவான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு – மூன்று முக்கிய பங்குகளை ஒரே நேரத்தில் வகித்த கார்த்திக் கட்டமனேனி , இசையமைப்பாளர் கௌரா ஹரியின் அதிரடி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

Tags : Teja Sajja ,Karthik Katamaneni ,D.G. Vishwa Prasad - Keerthy Prasad ,People Media Factory ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...