×

பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு

பாவம் அவரே கன்பீயூஸ் ஆயிட்டார்ன்னு ‘காவலன்’ படத்தில் அடிக்கடி விஜய்யிடம் சொல்லி காமெடி செய்வார் வடிவேலு. தற்போது வடிவேலுவே கன்பியூஸ் ஆயிட்டார்னு சொல்றளவுக்கு அவரைபற்றிய ஒரு மேட்டர் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றை வருடமாக படங்களில் நடிக்காமல் இருக்கும் வடிவேலு அடுத்து கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனை அவரது முன்னிலையில் கமல் 60 ஆண்டு நிறைவு விழாவில் அறிவித்தனர். இதற்கிடையில் வெப் சீரிஸில் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘என்னாது வெப் சீரிஸா... வெப் சீரிஸெல்லாம் ஒண்ணும் நடிக்கலே.. புதிய படத்துல நடிக்கற அறிவிப்பு தான் ஜனவரி மாசம் வரப்போவுது’ என்றார்.

Tags : Sin ,
× RELATED அக்சாய் சின் மற்றும் அருணாச்சல...