×

கணவருக்காக தயாரிப்பாளரான நடிகை

சென்னை: நடிகை நிவேதா ரவி தான் பல வருடங்களாக காதலித்து கரம்பிடிக்க போகும் இயக்குனர் நிவாஸ் சண்முகத்தின் கனவை நிறைவேற்ற தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். மற்றும் இந்த படத்தில் நடித்தும் உள்ளார்.
ஹாப்பி எண்டிங்- பைலட் பிலிம் என்ற தலைப்பில் சுவாரசியமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல குணச்சித்திர நடிகை ரமா நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் சக்தி, படத்தொகுப்பு அசோக் அய்யப்பன், இசை எம்.எஸ் லாம்ப் என பணிகளை மேற்கொண்டுள்ளனர். விரைவில் ஓடிடி தளத்தில் வரவிருக்கும் இந்த ஹாப்பி எண்டிங் பைலட் பிலிம் – யின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிவேதா ரவி, சிங்கப்பெண்ணே டிவி தொடரில் நடித்துள்ளார்.

Tags : Chennai ,Nivetha Ravi ,Nivas Shanmugam ,Rama ,Shakthi ,Ashok Ayyappan ,M.S. Lamb ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...