சென்னை: இசை அமைப்பாளரும், பாடருகமான ஏ.ஆர்.ரஹ்மான், சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய மகள்களும், ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். கதீஜா இசை அமைப்பாளராகவும், ஏ.ஆர்.ஆர்.அமீன் பாடகராகவும் பணியாற்றுகின்றனர். ரஹீமா மட்டும் திரையுலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த அவர், தற்போது தனது படிப்பை முடித்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
தனது மகள் பட்டம் பெற்றதை பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘என் லிட்டில் பிரின்சஸ் ரஹீமா, Hospitality, Entrepreneurship, Innovation ஆகியவற்றில் கவனம் செலுத்தி, கிளியன் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஒரு தந்தையாக நான் பெருமைப்படுகிறேன்’ என்று பெருமிதப்பட்டுள்ளார். இதையடுத்து ரஹீமாவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆங்கில பட இயக்குனர் பிரிட்டன் அம்புரோஸ், `உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ரஹீமா. இங்கிலாந்துக்கு வாருங்கள். நாம் கொண்டாடலாம்’ என்று வாழ்த்தியுள்ளார். தனது முதுகலை பட்டத்தை முடித்து, துபாய் சர்வதேச சமையல் கலை மையத்தில், பட்டப்படிப்பில் இளங்கலை பட்டத்தையும் ரஹீமா முடித்துள்ளார்.
