×

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சாந்தினி

ரா... ரா... ராஜசேகர், யார் இவர்கள் ஆகிய படங்களை இயக்கி முடித்த பாலாஜி சக்திவேல், அந்த படங்கள் இன்னும் திரைக்கு வராத நிலையில், புதுப்பட ஷூட்டிங்கை சென்னையில் தொடங்கியுள்ளார். இதில் புதுமுகம் ஹீரோ. சாந்தினி ஹீரோயின். இதில் நடிப்பது குறித்து சாந்தினி
கூறுகையில், ‘பாலாஜி சக்திவேல் படம் குறித்து எந்த தகவலும் சொல்ல முடியாது.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் தயாரிக்கும் அன்புள்ள கில்லி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நாய் நடிக்கிறது. நான் ஹீரோயின். என் திருமணத்துக்கு முன் நடித்த காதல் முன்னேற்ற கழகம், நான் அவளை சந்தித்தபோது, வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2, மை டியர் லிசா, ஐலா, கறிசோறு, அச்சமில்லை அச்சமில்லை, பற ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. ஐலா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன்’ என்றார்.

Tags : Shanthini ,Balaji Sakthivel ,
× RELATED சிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்!