×

50வது படத்தில் முடி திருத்தும் தொழிலாளி வேடம்: விஜய் சேதுபதி பெருமிதம்

சென்னை: கடந்த 1996ல் பி.வாசு இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த ‘லவ் பேர்ட்ஸ்’ என்ற படத்தில் சிறிய கேரக்டரில் தோன்றியவர், விஜய் சேதுபதி. பிறகு ‘கோகுலத்தில் சீதை’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘புதுப்பேட்டை’ உள்பட சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த அவர், சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர், தனது 50வது படம் என்று ‘மகாராஜா’ படத்தை அறிவித்துள்ளார். நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. மம்தா மோகன்தாஸ் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில், மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி கூறியதாவது:

ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படம் என்பது மறக்க முடியாத அனுபவமாக அமையும். எனக்கும் ‘மகாராஜா’ படம் 50வது படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நித்திலன் சாமிநாதனுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த அனுபவத்தின் பரிசு என்று சொல்லலாம். இதுவரை என்னை இயக்கிய இயக்குனர்களிடம் இருந்து நான் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொள்கிறேன். நான் மேற்கொள்ளும் பணிகள் என்னை நன்கு யோசிக்க வைக்கிறது. நம்மை யோசிக்க வைக்கும் எந்தவொரு விஷயமும் நம்மை முன்னெடுத்து செல்லும். எனது திரைப்பயணத்தில் இது நான் உணர்ந்து தெரிந்துகொண்ட விஷயமாகும். இதில் நான் முடி திருத்தும் தொழிலாளியாக நடித்துள்ளேன். அவனுக்கு மகாராஜா என்று பெயர் சூட்டி, அவன் இருக்கையை சிம்மாசனமாக்கியதை ரசிக்கிறேன்.

The post 50வது படத்தில் முடி திருத்தும் தொழிலாளி வேடம்: விஜய் சேதுபதி பெருமிதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi Perumitham ,Chennai ,Vijay Sethupathi ,P.Vasu ,Prabhu Deva ,Nagma ,Kollywood Images ,
× RELATED நிறம் மாறும் தோல் மம்தா மோகன்தாசுக்கு அரியவகை நோய் பாதிப்பு