பாளையில் முப்பிடாதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

நெல்லை:  பாளை வடக்குப்படை முப்பிடாதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா விமரிசையாக   நேற்று இரவு நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை செல்வவிநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது. ஆலயத்தை வந்தடைந்ததும் அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். இதையொட்டி பாளை மார்க்கெட் அருகேயுள்ள மஹாலில் அன்னதானம் நடந்தது. திமுக மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப், ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் அன்னதானத்தை  துவக்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் வக்கீல் தினேஷ், மன்சூர், செல்லத்துரை, நெல்லை முத்து, சைலு, பலராமன், சித்திக் மற்றும் மகர ஜோதி பாத யாத்திரை பக்தர் குழு நிர்வாகிகள் பாபுகுருசாமி, ஜோதி, மாரிசுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இரவு நடந்த பூக்குழி திருவிழாவில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

× RELATED திருவில்லி. பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா