பலம் தரும் ஸ்லோகம் : (சந்திராஷ்டம தொல்லைகள் நீங்க...)

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்
ஸும் ஸ்ரீவத்ஸ மெளக்திக தரம் ப்ரணமாமி
நித்யம்.

பொதுப்பொருள்:

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணங்களைக் கொண்டவரும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்துமாலையைத் தரித்தவருமான சந்திரனை நமஸ்கரிக்கிறேன்.

(இத்துதியை அவரவருடைய சந்திராஷ்டம தினங்களில் பாராயணம் செய்து வந்தால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நீங்கும்.)

× RELATED திருமண வரமருளும் திருவில்லிப்புத்தூராள்