×

வெளிநாட்டு பயணத்தில் இருந்து பாதியில் திரும்பி கோவை ஆசிரமத்தில் சமந்தா தியானம்

சென்னை: வெளிநாட்டிலிருந்து திடீரென கோவைக்கு வந்த சமந்தா, தியானத்தில் ஈடுபட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கோடை காரணமாக, படப்பிடிப்புகளுக்கு பிரேக் கொடுத்துவிட்டு, சமந்தா வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். கடும் வெயிலில் தனக்கு உடல் அலர்ஜி ஏற்படுவதால் அவர் குளிரான பிரதேசங்களில் தங்கியிருக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதமாக அவர் வெளிநாட்டில் இருந்தார்.

இம்மாதம் முழுவதும் அங்கேயே இருக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கிடையே யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் அவர் திடீரென இந்தியா வர முடிவு செய்து, நேற்று முன்தினம் மும்பைக்கு வந்துவிட்டார். அங்கிருந்து கோவைக்கு வந்தவர். ஆசிரமம் ஒன்றுக்கு சென்று அங்கு தியானத்தில் ஈடுபட்டார். இந்த புகைப்படங்கள் ேநற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. திடீரென தனக்கு மனதளவில் அசவுகரியம் தென்பட்டதால் தனது வெளிநாடு பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post வெளிநாட்டு பயணத்தில் இருந்து பாதியில் திரும்பி கோவை ஆசிரமத்தில் சமந்தா தியானம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Coimbatore Ashram ,Chennai ,Coimbatore ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஷாருக்கான் ஜோடியாகிறாரா சமந்தா?