×

வனிதா மகனுக்கு ஜோடியாகும் பிரபு சாலமன் மகள்

சென்னை: மைனா’, ‘கொக்கி’, ‘கும்கி’ உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அவரது மகள் ஹேசல் ஷைனி இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கிறார்.தற்போது மகள் ஹேசல் ஷைனியை ஹீரோயினாக அறிமுகப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருக்கிறார் பிரபு சாலமன். இந்த படத்தில் ஹீரோவாக நடிகை வனிதா விஜயகுமார் மகன் விஜய் ஹரி தேர்வாகியுள்ளார். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் முன்னணி இயக்குநரின் படத்தில் அறிமுகமானால் நல்ல தொடக்கமாக அமையும் என மகனுக்கு வனிதா அட்வைஸ் செய்தாராம்.

அப்போதுதான் தனது அடுத்த படத்திற்காக பிரபு சாலமன் புதுமுகத்தை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை பிரபு சாலமன் பார்த்துள்ளார். உடனே ஓகே சொல்ல படப்பிடிப்பிற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இப்படம் ‘கும்கி’ படத்தைப் போல் மிருகங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் படமாக இருக்கும் என்றும் யானைக்கு பதிலாக இந்த படத்தில் புலி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்திற்காக சிறப்பு பயிற்சிகள் சிலவற்றை விஜய் ஹரி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் சொல்லப்படுகிறது.’

 

The post வனிதா மகனுக்கு ஜோடியாகும் பிரபு சாலமன் மகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vanita ,Lord Solomon ,Chennai ,Prabhu Solomon ,Hazel ,Shiny ,Hazel Shiny ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அந்தகன் டிரெய்லர் வெளியானது