×

விரக்தியில் அனுபாமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தில் சாய்பல்லவி, அனுபாமா பரமேஸ்வரன் அறிமுகமாகினர். இருவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். இதில் சாய் பல்லவிக்கு படங்கள் குவிந்த வண்ணமிருக்கிறது. மாரி2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்ததுபோல் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் அனுபாமா.

இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் விரக்தியில் மூழ்கியிருப்பதுடன் தெலுங்கில் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதில் அப்செட் ஆனார். விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அனுபாமாவிடம், ‘உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால்தான் வாய்ப்பு வரவில்லை’ என தெரிவித் துள்ளனர். இதையடுத்து ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய அனுபாமா சாப்பாடு, தண்ணி இல்லாமல்  தினமும் 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்.

Tags : Anupama Parameswaran ,
× RELATED சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனு:...