×

மது குடிக்கும் காட்சியில் ஓவியா குடித்தது என்ன?

நடிகை ஓவியா நடிப்பில் 90 எம்எல் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில் மது குடிக்கும் காட்சி, லிப் டு லிப் முத்தம், படுக்கை அறை காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது கணேஷா மீண்டும் சந்திப்போம் புதிய படத்தில் நடித்திருக்கிறார் ஓவியா. ரத்திஷ் ஹேராட்டு இயக்கி உள்ளார். இதிலும் ஓவியா மது அருந்தும் காட்சி இடம்பெறுகிறது. இதுபற்றி இயக்குனர் கூறியதாவது: நவநாகரீக பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறார் ஓவியா. கதாபாத்திரதுக்கு ஏற்ப மது அருந்தும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். உண்மையிலேயே ஓவியா மது அருந்தவில்லை. ஆப்பிள் ஜூஸ்தான் குடித்து நடித்திருக்கிறார். இப்படமே சற்று வித்தியாசமான கதைக்களம் கொண்டது. 1940களில் புல்லட் மோட்டார் பைக் மிகவும் பிரபலம். அந்த புல்லட் வண்டி இப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. ஹீரோ பிருத்வி திருடன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். சிங்கம்புலி, மதுமிதா, ேதவிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருண்விக்ரமன்கிருஷ்ணன் தயாரிப்பு. விபின் கே.ராஜ் ஒளிப்பதிவு. என்எல்ஜி சிபி இசை. இப்படத்தில், ‘வியா வியா ஓவியா நீ கிளியோபாட்ரா ஆவியா’ என்ற பாடல் ஓவியா பெயரை கொண்டு எழுதப்பட்டி ருக்கிறது’ என்றார் இயக்குனர் ரத்திஷ்.

Tags : Oviya ,
× RELATED கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பளுதூக்குதலில் தமிழ்நாடுக்கு தங்கம்