×

ஆலங்காயம் அருகே காட்டுப்பன்றிகளுக்கு வைத்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு படுகாயம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த சுண்ணாம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(37), விவசாயி. கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார். சுண்ணாம்புபள்ளம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு விவசாய நிலத்தின் அருகே, சுதாகர் தன்னுடைய பசு மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று கட்டியிருந்தார். அப்போது, காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை எதிர்பாராதவிதமாக பசுமாடு கடித்ததாக கூறப்படுகிறது.   இதனால், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டியது.  அப்போது, வெடி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்காயம் போலீசார், வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக மாட்டிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post ஆலங்காயம் அருகே காட்டுப்பன்றிகளுக்கு வைத்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Alangayam ,Vaniyampadi ,Sudhakar ,Sunnambupallam ,Tirupathur district, ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...