×

போராட்டத்துக்கு பலன் கண்ணப்பா சம்பத் ராம் நெகிழ்ச்சி

சென்னை: விஷ்ணு மன்ச்சு நாயகனாக நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் அக்‌ஷய்குமார், பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால், மதுபாலா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க, அவர்களுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் சம்பத் ராம், தனது கதாபாத்திரம் குறித்து பேசியது: மோகன் பாபு சார் எனக்கு அளித்த மூன்றாவது வாய்ப்பு ‘கண்ணப்பா’. முதல் இரண்டு வாய்ப்புகளும் சிறியது என்றாலும், கண்ணப்பா படத்தில் என் கதாபாத்திரம் நான் எதிர்பார்க்காதது, ஆனால் சினிமாவில் நான் நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது.

இப்படி ஒரு வேடத்திற்காக தான். பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறேன். அது கண்ணப்பா படம் மூலம் நிகழ்ந்திருக்கிறது. சந்துடு என்ற கதாபாத்திரத்தில் ஒரு குழுவின் தலைவனாக நடித்திருக்கும் எனது உடை, மேக்கப் அணைத்துமே வித்தியாசமாக இருப்பதோடு, எனது கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும். எனக்கான வசனங்கள் மற்றும் யுத்த காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறினார்.

 

Tags : Kannappa ,Sampath Ram ,Chennai ,Vishnu Manchu ,Akshay Kumar ,Prabhas ,Mohanlal ,Sarathkumar ,Kajal Aggarwal ,Madhubala ,Mohan… ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...