×

நடிகராக மாறிய தயாரிப்பாளர்

ஒரு படத்தில் தயாரிப்பாளர் நடிக்கிறார் என்றால், பெரும்பாலும் அந்த கதாபாத்திரம் படத்தின் கதையில் வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கும். ஆனால், எம்கே பிலிம் ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாரா’ என்ற படத்தில், அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் காவல் ஆய்வாளராக இயல்பாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பு பெற்றது. டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை ஈர்த்தது. இப்படத்தின் விமர்சனங்களில் கார்த்திகேசனின் யதார்த்த நடிப்பை பலர் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது திருமலை புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுகவனம் இயக்கும் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கார்த்திகேசன், இதில் ஏற்றுள்ள கேரக்டர் தனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறார். அடுத்து அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங், அவரது பிறந்தநாளான ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது.

Tags : MK Film Works ,Karthikesan ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...