×

வரும் 29ம் தேதி டப்பாங்குத்து வெளியாகிறது

சென்னை: மாடர்ன் டிஜிடெக் மீடியா வழங்க, எஸ்.ஜெகநாதன் தயாரிப்பில், மதுரை மண்ணின் நாட்டுப்புறக் கலைஞர் களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படமாக ‘டப்பாங்குத்து’ உருவாகியுள்ளது. சங்கரபாண்டி, தீப்தி, ‘காதல்’ சுகுமார், ஆண்ட்ரூஸ், துர்கா, விஜய் கணேஷ், ரோபோ சந்துரு நடித்துள்ளனர். பரவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர் ராஜன், கிடாக்குழி மாரியம்மாள், ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி ஆகிய நாட்டுப்புறக் கலைஞர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தீனா நடனப்பயிற்சி அளித்துள்ளார். ராஜா கே.பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்ய, சரவணன் இசை அமைத்துள்ளார். எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, முத்துவீரா இயக்கியுள்ளார். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற இப்படம், வரும் 29ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

 

Tags : Chennai ,DigiTech Media ,Jehanathan ,Madurai ,Sankarabandi ,Deepti ,Kathal' Sukumar ,Andrews ,Durga ,Vijay Ganesh ,Robot Chanduru ,Paravai Muniyamma ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்