- திராந்த பரசக்தி
- வல்லுவர் கோட்டை
- சென்னை
- சுதா கொங்கரா
- ஆகாஷ் பாஸ்கரன்
- டான் பிக்சர்ஸ்
- சிவகார்த்திகேயன்
- ரவிமோகன்
- அதர்வா முரளி
- ஸ்ரீ லீலா
- ஜி. விபிரகாஷ் குமார்
- இன்பன் உதயநிதி
- செங்குட்டுவன்
சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ள படம், ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். 1960களின் வரலாற்று பின்னணியில் தமிழின் பெருமையை சொல்லும் இப்படம், வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இப்படத்தில் நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதர்வா முரளியின் முதல் பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இன்று அவருடன் இணைந்து நடித்துள்ளேன். நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்து வியந்த ஹீரோ, ஜெயம் ரவி. இன்று ரவி மோகனாக மாறி வில்லனாக நடித்துள்ளார். படத்தில் மட்டும்தான் அவர் வில்லன். நிஜத்தில் எப்போதுமே எங்களுக்கு ஹீரோதான். அதற்குள் ஜி.வி.பிரகாஷ் குமார் 100 படங்களுக்கு இசை அமைத்துவிட்டாரா என்று என் அம்மா ஆச்சரியப்பட்டார் ’ என்றார். ரவி மோகன் பேசுகையில், ‘இதில் நடிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கினேன். பிறகு துணிச்சலுடன் நடித்தேன். சிவகார்த்திகேயனின் 25 படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது படத்தில், தமிழில் ஸ்ரீலீலாவின் முதல் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை’ என்றார்.
