×

டிராகன், டூரிஸ்ட் பேமிலி படங்களுக்கு விருது

சென்னை: தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை, ஆகிய திரையுலகில் வெளியான தரமிக்க படைப்புகளையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 சென்னையில் வழங்கப்பட்டது.

ஜென் ஜீ ஆடியன்ஸின் பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் விருதை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘டிராகன்’ படத்துக்காக பெற்றார். சிறந்த இயக்குனருக்கான விருதை ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குனரான அபிஷன் ஜீவந்திற்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெஸ்ட் ரீ ரிலீஸ் ஆடியன்ஸ் ஃபேவரைட் விருது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து விருது விழாவை நடத்தினர்.

Tags : Chennai ,7 ,Aswath Marimuthu ,Abhishan Jeevanth ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...