×

பொய் தகவல் பரப்புகிறார்கள்: லிங்குசாமி சகோதரர் சந்திரபோஸ் பேட்டி

சென்னை: செக் மோசடி தொடர்பாக இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரரும் திரைப்பட தயாரிப்பாளருமான சுபாஷ் சந்திரபோசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து சுபாஷ் சந்திரபோஸ், அவரது வக்கீல் பிரகாஷ் அளித்த பேட்டி: எங்கள் நிறுவனத்தின் மீது பேஸ்பேன் நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138-ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி சந்திப்போம். மற்றபடி கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறவில்லை. எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். பேஸ்பேன் நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் (சுபாஷ் சந்திரபோஸ்) தமிழ்க்குமரன் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

Tags : Lingusamy ,Chandrabose ,Chennai ,Subhash Chandrabose ,Prakash ,Facepan Company ,Nineteenth Metropolitan Criminal Court ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு